செவ்வாய், 3 மார்ச், 2009

ஜாக்கிரதை


dollar
Originally uploaded by rajiprem72

நான் ஆன்லைன் உலகத்தில் கிட்டதட்ட 13 ஆண்டுகளாக இருக்கிறேன். எனது ஈமெயில் ID யிக்கு பல லட்சம் ரூபாய் லாட்டரி விழுந்திருப்பதாக ஓராயிரம் ஈமெயில் எனக்கு வந்திருக்கிறது.

இந்த Blog அதை பற்றி அல்ல.

நேற்று என் மொபைல்யிக்கு ஒரு sms வந்தது .அதன் மெசேஜ் ..

YOUR MOBILE NO HAS WON USD250,000.00 IN 2009 CFCS ANNUAL MOBILE DRAW, TO CLAIM YOUR PRICE SEND YOUR NAME ,AGE,TEL & ADDRESS TO EMAI:cfs4@cooltoad.com

ஈஸ்வரா , இது போன்று எதனை sms வர போகிறதோ ?

அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள் , அதிக பணத்திருக்கு ஆசை பட்டு உள்ளதையும் இழக்காதீர்கள் .

நன்றி

திங்கள், 2 மார்ச், 2009

Idea விற்பனைக்கு


idea selling
Originally uploaded by rajiprem72

நாம் படிப்பதற்கு நிறைய புத்தகங்களை வாங்குகிறோம்

அவற்றை இலவசமாக ஆன்லைன் யில் படிக்க வேண்டுமா ?

கீழ் காணும் ஆங்கில பிரதிகளை இலவசமாக படிக்கச் வேண்டுமா ?

Health & Wellness,Saveur,Popular Photography,Men;s Health,Kiplinger's,Popular Mechanices,VIV Mag,CAR and Driver,PC World,ELLE,Technology Review,Outside ,Macworld,Esquire,NME,Mac World,Lonely Planet,Reader's Digest,Black Book,Foreign Policy,iPhone Life.

இதை ஒரு புத்தகத்தை வாசிப்பது போல ஆன்லைன் யில் வாசிக்கலாம்.

அப்படியானால் கீழ் காணும் PAYPAL அக்கௌன்ட் பட்டனை கிளிக் செய்யவும். எனக்கு நீங்கள் 2 US டாலர் தரவேண்டும்.








பணம் செலுத்திய பின் எனக்கு prem@technosolutions.in என்ற என் ஈமெயில் ID இக்கு மெயில் செய்யவும் .

நான் உங்களுக்கு மேல் காணும் ஆங்கில நாளேடுகளை எப்படி ஆன்லைன் யில் இலவசமாக படிப்பது என்று சொல்லுகிறேன்.

சாய் பாபாவும் நானும் -பகுதி 3


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

என்னுடைய நண்பன் ஒரு தீவிர சாய் பாபா பக்தன் . அவனுடைய தொழில் நிறுவனத்தின் பெயர் மற்றும் அவனுடைய மகளின் பெயர் ஆகியவற்றில் சாய் பாபா பெயர் இடம் பெற்று இருக்கும் . அந்த அளவு சாய் பாபா பக்தி உள்ளவன்.அவனக்கு என்னுடைய சாய் பாபா அனுபவங்களை சொல்லியிருக்கிறேன்.

ஒரு நாள் அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான். " நான் ஷிர்டி செல்கிறேன் என்னுடன் வருகிறாயா ? " என்று கேட்டான் .

நான் வழக்கம் போல " நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" அதனால் நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன்.

அவன் போய் வரும் செலவு வரை அவனே பார்த்து கொள்கிறேன் என்று சொன்னான்.

நான் அவன் சொன்னதை எல்லாம் தட்டி கழிக்கவே அவன் சாபம் இட்டான்.

"நீ ஷிர்தி செல்வாய் ஆனால் நீ சாய் பாபாவை காண முடியாது " என்று சொல்லி நடையை கட்டினான்.

இந்த சம்பவம் நடந்து பல மதங்கள் ஓடின.

உங்களுக்கு எல்லாருக்கும் குஜராத் பூகம்ப சம்பம்வம் ஞயாபகம் இருக்கும் என நம்புகிறேன். நான் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒரு ஊறுப்பினர் ஆவேன். நாங்கள் ஒரு லாரியில் உணவு பொருட்கள் மற்றும் மருத்துகள் (கிட்டதட்ட 15 டன் உதவி பொருட்களுடன்) சென்றோம் .

நாங்கள் தரை வழி மார்கமாக குஜராத் சென்றோம். குஜராத் செல்ல 7 நாட்கள் தேவை . ஒரு நாள் நாங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை கடந்து இருக்கும் பொது எங்கள் லாரி சிக்னல் கிடைக்கவில்லை என்று சாலையில் காத்து கொண்டிருந்தது . அந்த இடத்தில எங்கு பார்த்தாலும் காவி கொடி பறந்து கொண்டிருந்தது. நான் எங்கள் லாரி டிரைவர் யை பார்த்து கேட்டேன் . நாம் இருக்கும் இடத்திற்கு என்ன பெயர் என்று . அவர் சொன்னார்

"நாம் இருக்கும் இடம் சாய் பாபா கோவில் அமைந்துள்ள ஷிர்டி என்றார்".

எனக்கு கோவிலின் கோபுரம் காண முடிந்தது .நான் டிரைவர் இடம் நான் போய் கோவிலை பார்த்துவிட்டு வரட்டுமா என்றேன். ?

அதற்கு அவர் சிக்னல் எப்போது வேண்டுமானாலும் கிடக்கலாம், அதனால் நாம் காத்திருக்க முடியாது என்றார். எனக்கு நல்ல நினைவிருக்கிறது நாங்கள் அந்த இடத்தில் அரை மணி நேரம் மேல் காத்திருந்தோம். இருந்தாலும் என்னால் கோவிலுக்கு செல்ல முடிய வில்லை.

இது என்னுடைய நண்பனின் சாபமாக இருக்குமோ ?ஒன்றும் புரிவயில்லை.

இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு அனுபவம்.

இந்த சம்பவத்தை என்னுடைய நண்பனுக்கு சொன்னேன்.அவன் மிகவும் வருந்தினான் .

சாய் பாபாவும் நானும் - பகுதி 2


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

நாங்கள் ஒரு பிளாட்டில் வசிக்கிறோம் . மொத்தம் ஆறு வீடுகள் உள்ளன . ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடி. இரண்டாம் மாடியில் இருப்பவர்கள் சாய் பாபாவின் தீவிர பக்தர்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் உள்ள ஷிர்திக்கு செல்வது வழக்கம் .

சாய் பாபாவுடன் ஆனா என்னுடைய அனுபவத்திற்கு வருவோம்.

ஒரு நாள் எனக்கு ஒரு கனவு. நான் வாக்கிங் போவதற்காக மொட்டை மாடிக்கு போய் கொண்டிருக்கிறேன். (பொதுவாக நான் வாக்கிங் போவது எங்கள் மொட்டை மாடியில் தான் .நிலா வெளிச்த்தில் நடப்பது தனி சுகம் ). நான் மாடிக்கு போகும் போது யாரோ அங்கு படுத்திருந்தார்கள் (நான் கனவை பற்றி சொல்லிவருகிறேன்). அவர் ஒரு வயதானவர் போல் தோன்றினார்.

நான் அங்கு படுத்துதிருந்தவரை பார்த்து

"யார் நீங்கள் ? எங்கள் மொட்டை மாடியில் வந்து படுத்து இருக்குறீர்களே என்று கேட்டேன்.

அதற்கு அவர்
"நான் ஒரு வயோதிகன் , நான் மாடி படி ஏறி வந்ததால் கலைத்து போய்விட்டேன் என்றார்".

நான் கேட்டேன்

"நீங்கள் யார் ?,இங்கு ஏன் வந்தீர்கள் ?"

அதற்கு அவர் என்னை உனக்கு தெரியவில்லையா என்று கேட்டார் ?

நான் சற்று உற்று பார்தேன். அவர் பார்ப்பதற்கு சாய் பாபா போல் காட்சி அளித்தார் .

நான் "நீங்கள் சாய் பாபாவ" என்றேன்

அதற்கு அவர் ஆமாம் என்று தலை அசைத்தார் .

நான் "நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன்.

அவர் "நான் இரண்டாம் தளத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு வந்தேன் " என்றார்.

நான் " அப்படியானால் அவர்கள் வீட்டுக்கு போகாமல் மாடி வரை வரவேண்டிய கரணம் என்ன " என்று

அவர் ." நான் எப்போடியோ இங்கு வந்து விட்டேன் . எனக்கு ஒரு உதவி செய்வாயா " என்று கேட்டார்.

நான் "சொல்லுங்கள் என்னால் முடிந்தால் செய்கிறேன் என்று "

அவர் " அந்த இரண்டாம் மாடி வீட்டில் உள்ளவர்களிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா " என்று கேட்டார்.

உடனே என் கனவு கலைந்தது .

என்னால் ஒன்றும் நம்ப முடியவில்லை. நான் காலை எழுந்தவுடன் அவர்களிடம் எதை சொல்லலாமா சொல்லவேண்டாமா என்று பல முறை யோசித்தேன். இந்த அறிவியல் காலத்தில் இந்த கனவை எப்படி எடுத்து கொள்வார்களோ என்று நினைத்தேன்.

என்ன நினைத்தால் என்ன என்று எண்ணி அவர்கள் கதவை தட்டினேன் . அவர்களிடம் என் கனவை பற்றி கூறினேன். என் கனவை பற்றி சொல்லி முடிந்தவுடன் அவர்கள் அனைவரம் அழ தொடங்கி விட்டார்கள். நாங்கள் சாய் பாபாவை பல ஆண்டுகளாக வழிபடுகிறோம் ஆனால் இது வரை அவர் எங்கள் கனவுகளில் வந்தது இல்லை .நீ பாகியம் செய்தவன் என்று சொன்னார்கள்.

இன்று எங்கள் மொட்டை மாடியில் சாய் பாபாவிற்கு ஒரு கோவில் உள்ளது . மேல் வீட்டார்கள் செய்தது.

இதுவும் ஒரு இனிய அனுபவம் தான்.

அடுத்த சாய் பாபா அனுபவம் அடுத்த ப்ளோகில்.

சாய் பாபாவும் நானும் - பகுதி 1


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

நான் சாய் பாபா பக்தன் அல்ல .நான் ஒரு நாத்திகனும் அல்ல.

ஆனால் சாய் பாபாவால் என் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்சிகளை இங்கே எழுதிகிறேன்.

நான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு விடுமுறையில் ஒரு மாதா காலம் வேலைக்கு போயிருந்தேன். அது ஒரு மார்க்கெட்டிங் வேலை.

ஒரு நாள் காலை நானும் என்னுடைய மேல் அதிகாரியும் மௌன்ட் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் துண்டு சீட்டு பிரசுரம் செய்து வந்தார். எனக்கும் ஒரு நோட்டீஸ் கிடைத்தது . அது சாய் பாபாவை பற்றிய பிரசுரம் ஆகும். எனக்கு நோட்டீஸ் தந்தவர் என்னை சாய் பாபா கோவிலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.

நான் சொன்னேன்
"நான் ஒரு சிவ பக்தன் நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" . அதனால் என்னை மன்னிக்கவும் எனக்கு சாய் பாபா கோவிலுக்கு வர மனம் இல்லை என்று சொன்னேன்.

நோட்டீஸ் தந்தவர் சொன்னார்
"சார் நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி நீங்கள் இன்று சாய் பாபா கோவிலுக்கு வருவீர்கள்" என்றார் .

எனக்கு சிரிப்பு வந்தது நான் விரும்பாமல் எப்படி சாய் பாபா கோவிலுக்கு செல்வேன் . எனக்கு சென்னையில் சாய் பாபா கோவில் எங்கிருக்கிறது என்றே தெரியாது.

அன்றைய நாள் நானும் என்னுடைய மேல் அதிகாரியும் பல இடங்களுக்கும் சென்றோம் . ஒன்றாக மதிய உணவு உண்டோம்.

அன்றைய பொழது மிகவும் கலைத்து போய்விட்டேன். மாலை ஒரு நான்கு மணி இருக்கும் என்னுடைய மேல் அதிகாரியின் மனைவி போனில் அவர் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் இன்று கேட்டு கொண்டார். நங்கள் இருவரும் சென்றோம்.

அந்த இடத்திற்கு நாங்கள் முதல் முறையாக செல்வதால் நாங்கள் தெரு தெருவாக சுற்றினோம் . அப்போது நான் ஒரு பிள்ளையார் சிலையை கண்டேன். நிறைய பக்தர்கள் வணங்கி கொண்டிருந்தார்கள். அன்று ஒரு வியாழ கிழமை . நான் அங்கு இருந்தவர்களை கேட்டேன் இது என்ன கோவில் என்று. அவர்கள் சொன்னார்கள் இது சாய் பாபா கோவில் என்று.

நான் திகைத்து போய் விட்டேன். என்னால் காலையில் நடந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை .அந்த நோட்டீஸ் தந்தவர் சொன்ன வாக்கியம் .

அவர் சொன்னது போல நான் சாய் பாபா கோவில் முன் நிற்கிறேன் .

இந்த அனுபவத்தை என்ன என்று சொல்ல்வது.

எனது சாய் பாபா அனுபவங்கள் தொடரும் .

தமிழ் மற்றும் ஆங்கிலம் வார்த்தைகளின் வினோத ஒற்றுமை.


TAMIL
Originally uploaded by rajiprem72

ஆங்கிலத்தில் உள்ள WAR மற்றும் POUR என்ற இரண்டு வார்த்தைகளை பாருங்கள்.

ஆங்கிலத்தில் WAR என்றால் தமிழில் போர் .

ஆங்கிலத்தில் POUR என்றால் தமிழில் வார் (அதாவது எனது வயிற்றில் பாலை வார்த்தாய் என்று பொருள் )

தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் WAR

தமிழில் வார் என்றால் ஆங்கிலத்தில் POUR

பார்த்தீர்களா தமிழ் மற்றும் ஆங்கிலம் வார்த்தைகளின் வினோத ஒற்றுமை.

ஞாயிறு, 1 மார்ச், 2009

லஞ்சம் ஒழிபோம்


stop corruption
Originally uploaded by rajiprem72

நம் தாய் நாட்டில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அதை நாம் ஒழிக்க ஒன்று சேர வேண்டும்.

உங்கள் கண் முன்னால் யாராவது லஞ்சம் வாங்கினால் . நீங்கள் கீழ் காணும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கவும்.

94440 77666,
94441 13058,
98400 82626,
98401 10906,
98409 23007,
94444 56024,
94441 70279,
93810 02009,
98406 18948,
044-2723 7139


மேலும் கீழ் காணும் வெப் சைட் கிளிக் செய்யவும்.

5thPillar


நம்மால் இயன்ற செயலை செய்வோம்

ஜெய் ஹிந்த்