சனி, 28 மார்ச், 2009

PHP Developer கள் தேவை

இரண்டு ஆண்டு அனுபவமுள்ள PHP Developer கள் தேவை.

தேர்ந்து எடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் 15,000௦௦௦/- சம்பளம் கொடுக்கப்படும்.

அவர்கள் ஆறு மாதத்திற்கு பிறகு வேலை நிரந்தரம் செய்ய படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் support@technosolutions.in என்ற ஈமெயில் முகவரிக்கு உங்களது resume யை அனுப்பவும் .

வியாழன், 12 மார்ச், 2009

என் கிரிவல அனுபவம்


நான் ஒரு சிவ பக்தன் . நான் திருவண்ணா மலை கிரிவல பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் . பௌர்ணமி அன்று 14 கிலோமீட்டர் கிரி வலம் வர வேண்டும்.

நான் பொதுவாக உடலை வருத்தி இறைவனை தொழுவதில் அதிக நம்பிக்கை இல்லாதவன் . கோவிலுக்கு சென்று இறைவனை கும்பிடுவதில் மட்டுமே போதும் என்பது என் பக்தியின் எல்லை .

என் நண்பர்கள் முடிந்த போதெல்லாம் கிரிவலம் செல்வது வழக்கம் . அவர்கள் மொத்தம் 15 முதல் 20 பேர் வரை இருப்பார்கள்.அவர்கள் ஒரு van யை வாடகைக்கு எடுத்து செல்வார்கள் . ஒவ்வொரு முறையும் என்னை அழைக்க மறக்க மாட்டார்கள். நானும் வழக்கம் போல மறுத்து விடுவேன்.

ஒரு பொர்ணமி அன்று என் நண்பர்கள் கிரிவலம் போக முடிவு செய்தார்கள் . அன்று வழக்கத்தை விட நிறைய பேர் வந்தனர். அவர்கள் வாடகைக்கு எடுத்த van மட்டும் போதாது அதனால் என்னிடம் என்னுடைய கார் தர முடியுமா என்று கேட்டார்கள் ?. நான் கிரிவலம் செல்வதற்கு தானே சந்தோஷமாக தருகிறேன் என்றேன். ஆனால் கார் ஓட்டுவதற்கு டிரைவர் கிடைக்க வில்லை. அதனால் நானே காரை வோட்டி செல்வது என முடிவு செய்தேன் . நீங்கள் செல்லும் கிரிவலம் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறேன். என்று அவர்களுடன் புறப்பட்டேன்.
நானும் வந்ததால் என்னுடைய நண்பர்கள் சந்தோஷம் அடைந்தனர்.

நாங்கள் கோவிலை அடையும் பொது இரவு 1.15 மணி . லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவில் முன் பெரிய அளவில் கற்பூரம் ஏற்ற பட்டிருந்தது. அனைவரும் அந்த தீபத்தை தொழுது தான் கிரிவலம் நடக்க ஆரம்பிப்பார்கள்.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது . நான் அந்து பெரிய கற்பூர தீபத்தின் முன் கண்ணை முடிகொண்டு ஈஸ்வரனை வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பலமாக மழை பொழிய ஆரம்பித்தது (அதுவரை மழை பொழியும் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை ). மழை ஜோராக பொழிந்தது.எல்லாரும் அங்கிருந்து கடைகளுக்கு ஒதிங்கினர் . நாங்கள் கிட்ட தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக மழை நிற்க காத்திருந்தோம். ஆனால் மழை நின்ற பாடில்லை .

எனது நண்பன் சொன்னான் மழையிலே நடக்கலாமா என்று , நானும் சம்மதித்தேன். நாங்கள் மழையில் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் 2 1/2 மணி நேரத்தில் கிரிவலம் வந்தோம். அந்த நேரம் முழுவதும் பலமாகவும் , கொஞ்சம் மிதமாகவும் மழை பொழிந்து கொண்டே இருந்தது ஆனால் மழை நிற்க வில்லை . நாங்கள் கிரிவலம் முடித்தவுடன் மழையும் நின்று விட்டது.

என்னுடைய நண்பன் இதற்கு முன் பலமுறை கிரிவலம் வந்திருக்கிறான் . ஆனால் இதை போன்று ஒரு அனுபவம் அவனுக்கு கிடைக்க வில்லை என்றான். நானும் இதற்கு பிறகு பல முறை கிரிவலம் சென்றேன் ஆனால் இது போல் அனுபவம் கிடைக்க வில்லை .

இந்த நிகழ்வு எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும் .

வெள்ளி, 6 மார்ச், 2009

வச்சுடாண்டா ஆப்பு


jobs
Originally uploaded by rajiprem72



அமெரிக்காவில் அடுத்த 7 ஆண்டுகளில் 5 லட்சம் நர்சுகள் தேவை படுவார்கள்.

இதை பற்றி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில்.

"நாம் வெளி நாடுகளில் இருந்து வேளைக்கு ஆள் எடுப்பது என்பது அர்த்தமற்றது . அதற்கு பதிலாக அமெரிக்கர்களுக்கு நர்ஸ் பயிற்சி வழங்க வேண்டும் " என்றார்

இது நாள் வரை இந்திய ,சீனா மற்றும் பிலிபின்ஸ் போன்ற நாடுகளில் இருந்து நர்ஸ் வேளைக்கு ஆட்களை எடுத்து கொண்டிருந்தார்கள் .

இனி மேல் இந்தியாவை சேர்த்த நர்சுகளுக்கு அமெரிக்க வேலை என்பது கனவாகி விடும்.

வியாழன், 5 மார்ச், 2009

வெற்றி கூட்டணி எது ?


Elections
Originally uploaded by rajiprem72

தேர்தல் வர போகிறது . யார் எந்த கூட்டணியில் இருபார்கள் என்று யாருக்கும் தேர்தல் வரை சொல்ல முடியாது.

அதனால் நாம் நம் யூகத்தை இப்போது சொல்லி வைக்கிறோம் . தேர்தல் அன்று சரி பார்த்து கொள்ளலாம் .

இதோ என்னுடைய யூகம்

கூட்டணி ஒன்று
திமுக , பாமக மற்றும் காங்கிரஸ்

கூட்டணி இரண்டு
ஆதிமுக ,கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக

பாஜக மற்றும் விஜயகாந்தின் கட்சி தனித்து போட்டியிடும்

நீங்கள் உங்கள் கூட்டணி யூகத்தை கமெண்ட் யில் சொல்லுங்க . தேர்தல் நேரத்தில் பார்போம்.

செவ்வாய், 3 மார்ச், 2009

என் கேள்விக்கு என்ன பதில் ? -Part 2


Puzzle, Riddle
Originally uploaded by rajiprem72

மேல உள்ள படத்தை பாருங்கள் . உங்களுக்கு விடை தெரிகிறதா ?

தெரியுமானால் , comment section யில் சொல்லுங்களேன் .

வெகுமதி ஒன்றும் இல்லை , வெறும் பாராட்டு மட்டும் தான்.

விடை சில நாட்களில் தெரிவிக்கிறேன் .

என் கேள்விக்கு என்ன பதில் ?


Puzzle
Originally uploaded by rajiprem72

மேல உள்ள படத்தை பாருங்கள் . உங்களுக்கு விடை தெரிகிறதா ?

தெரியுமானால் , comment section யில் சொல்லுங்களேன் .

வெகுமதி ஒன்றும் இல்லை , வெறும் பாராட்டு மட்டும் தான்.

விடை சில நாட்களில் தெரிவிக்கிறேன் .

Idea விற்பனைக்கு


Webmail 2 GMail
Originally uploaded by rajiprem72

நான் என்னுடைய வெப்சைட் Techno Solutions domain space வாங்கும் பொது எனக்கு 2 ஈமெயில் id தந்தார்கள்.

எனக்கு கிடைத்த வெப் space 25MB ஆகும். எனக்கு 10 ஈமெயில் வந்தால் என்னுடைய webspace நிறைந்து விடும் . அதற்கு மேல் வரும் ஈமெயில் bounce ஆக தொடங்கும்.

அதனால் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது .நான் பழையப்படி எனது பர்சனல் ஈமெயில் id தர வேண்டிய நிலையிக்கு தள்ள பட்டேன் .

இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தேன் .

இப்போது என்னுடைய ஈமெயில் id யை கூகிள் லில் இணைத்து விட்டேன் . இப்போது எனக்கு 7 GB வெப் space உள்ளது . எனக்கு 50 ஈமெயில் id வைத்து கொள்ள முடியும்.
என்னுடைய ஈமெயில் id மற்ற வேண்டிய அவசியம் இல்லை.இந்த எல்லா வசதிகளும் கூகிள் இலவசமாக தருகிறது .

நான் இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளேன் . உங்களுக்கும் என்னை போல official மெயில் id உள்ளதா ? உங்களுக்கும் 7 GB web space வேண்டுமா ?

அப்படியானால் நீங்கள் என்னுடைய PAYPAL account யிற்கு 20 USD அளிக்கவேண்டும்.

கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.





WebMail to GMail Software -Price Tag







நீங்கள் prem@technosolutions.in என்ற என் ஈமெயில் id யிக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் .

நான் அந்த Idea வை உங்கள் ஈமெயில் id யிக் அனுப்பி வைக்கிறேன்.