வியாழன், 12 மார்ச், 2009
என் கிரிவல அனுபவம்
நான் ஒரு சிவ பக்தன் . நான் திருவண்ணா மலை கிரிவல பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் . பௌர்ணமி அன்று 14 கிலோமீட்டர் கிரி வலம் வர வேண்டும்.
நான் பொதுவாக உடலை வருத்தி இறைவனை தொழுவதில் அதிக நம்பிக்கை இல்லாதவன் . கோவிலுக்கு சென்று இறைவனை கும்பிடுவதில் மட்டுமே போதும் என்பது என் பக்தியின் எல்லை .
என் நண்பர்கள் முடிந்த போதெல்லாம் கிரிவலம் செல்வது வழக்கம் . அவர்கள் மொத்தம் 15 முதல் 20 பேர் வரை இருப்பார்கள்.அவர்கள் ஒரு van யை வாடகைக்கு எடுத்து செல்வார்கள் . ஒவ்வொரு முறையும் என்னை அழைக்க மறக்க மாட்டார்கள். நானும் வழக்கம் போல மறுத்து விடுவேன்.
ஒரு பொர்ணமி அன்று என் நண்பர்கள் கிரிவலம் போக முடிவு செய்தார்கள் . அன்று வழக்கத்தை விட நிறைய பேர் வந்தனர். அவர்கள் வாடகைக்கு எடுத்த van மட்டும் போதாது அதனால் என்னிடம் என்னுடைய கார் தர முடியுமா என்று கேட்டார்கள் ?. நான் கிரிவலம் செல்வதற்கு தானே சந்தோஷமாக தருகிறேன் என்றேன். ஆனால் கார் ஓட்டுவதற்கு டிரைவர் கிடைக்க வில்லை. அதனால் நானே காரை வோட்டி செல்வது என முடிவு செய்தேன் . நீங்கள் செல்லும் கிரிவலம் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறேன். என்று அவர்களுடன் புறப்பட்டேன்.
நானும் வந்ததால் என்னுடைய நண்பர்கள் சந்தோஷம் அடைந்தனர்.
நாங்கள் கோவிலை அடையும் பொது இரவு 1.15 மணி . லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவில் முன் பெரிய அளவில் கற்பூரம் ஏற்ற பட்டிருந்தது. அனைவரும் அந்த தீபத்தை தொழுது தான் கிரிவலம் நடக்க ஆரம்பிப்பார்கள்.
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது . நான் அந்து பெரிய கற்பூர தீபத்தின் முன் கண்ணை முடிகொண்டு ஈஸ்வரனை வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பலமாக மழை பொழிய ஆரம்பித்தது (அதுவரை மழை பொழியும் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை ). மழை ஜோராக பொழிந்தது.எல்லாரும் அங்கிருந்து கடைகளுக்கு ஒதிங்கினர் . நாங்கள் கிட்ட தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக மழை நிற்க காத்திருந்தோம். ஆனால் மழை நின்ற பாடில்லை .
எனது நண்பன் சொன்னான் மழையிலே நடக்கலாமா என்று , நானும் சம்மதித்தேன். நாங்கள் மழையில் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் 2 1/2 மணி நேரத்தில் கிரிவலம் வந்தோம். அந்த நேரம் முழுவதும் பலமாகவும் , கொஞ்சம் மிதமாகவும் மழை பொழிந்து கொண்டே இருந்தது ஆனால் மழை நிற்க வில்லை . நாங்கள் கிரிவலம் முடித்தவுடன் மழையும் நின்று விட்டது.
என்னுடைய நண்பன் இதற்கு முன் பலமுறை கிரிவலம் வந்திருக்கிறான் . ஆனால் இதை போன்று ஒரு அனுபவம் அவனுக்கு கிடைக்க வில்லை என்றான். நானும் இதற்கு பிறகு பல முறை கிரிவலம் சென்றேன் ஆனால் இது போல் அனுபவம் கிடைக்க வில்லை .
இந்த நிகழ்வு எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.