திங்கள், 2 மார்ச், 2009

சாய் பாபாவும் நானும் - பகுதி 1


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

நான் சாய் பாபா பக்தன் அல்ல .நான் ஒரு நாத்திகனும் அல்ல.

ஆனால் சாய் பாபாவால் என் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்சிகளை இங்கே எழுதிகிறேன்.

நான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு விடுமுறையில் ஒரு மாதா காலம் வேலைக்கு போயிருந்தேன். அது ஒரு மார்க்கெட்டிங் வேலை.

ஒரு நாள் காலை நானும் என்னுடைய மேல் அதிகாரியும் மௌன்ட் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் துண்டு சீட்டு பிரசுரம் செய்து வந்தார். எனக்கும் ஒரு நோட்டீஸ் கிடைத்தது . அது சாய் பாபாவை பற்றிய பிரசுரம் ஆகும். எனக்கு நோட்டீஸ் தந்தவர் என்னை சாய் பாபா கோவிலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.

நான் சொன்னேன்
"நான் ஒரு சிவ பக்தன் நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" . அதனால் என்னை மன்னிக்கவும் எனக்கு சாய் பாபா கோவிலுக்கு வர மனம் இல்லை என்று சொன்னேன்.

நோட்டீஸ் தந்தவர் சொன்னார்
"சார் நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி நீங்கள் இன்று சாய் பாபா கோவிலுக்கு வருவீர்கள்" என்றார் .

எனக்கு சிரிப்பு வந்தது நான் விரும்பாமல் எப்படி சாய் பாபா கோவிலுக்கு செல்வேன் . எனக்கு சென்னையில் சாய் பாபா கோவில் எங்கிருக்கிறது என்றே தெரியாது.

அன்றைய நாள் நானும் என்னுடைய மேல் அதிகாரியும் பல இடங்களுக்கும் சென்றோம் . ஒன்றாக மதிய உணவு உண்டோம்.

அன்றைய பொழது மிகவும் கலைத்து போய்விட்டேன். மாலை ஒரு நான்கு மணி இருக்கும் என்னுடைய மேல் அதிகாரியின் மனைவி போனில் அவர் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் இன்று கேட்டு கொண்டார். நங்கள் இருவரும் சென்றோம்.

அந்த இடத்திற்கு நாங்கள் முதல் முறையாக செல்வதால் நாங்கள் தெரு தெருவாக சுற்றினோம் . அப்போது நான் ஒரு பிள்ளையார் சிலையை கண்டேன். நிறைய பக்தர்கள் வணங்கி கொண்டிருந்தார்கள். அன்று ஒரு வியாழ கிழமை . நான் அங்கு இருந்தவர்களை கேட்டேன் இது என்ன கோவில் என்று. அவர்கள் சொன்னார்கள் இது சாய் பாபா கோவில் என்று.

நான் திகைத்து போய் விட்டேன். என்னால் காலையில் நடந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை .அந்த நோட்டீஸ் தந்தவர் சொன்ன வாக்கியம் .

அவர் சொன்னது போல நான் சாய் பாபா கோவில் முன் நிற்கிறேன் .

இந்த அனுபவத்தை என்ன என்று சொல்ல்வது.

எனது சாய் பாபா அனுபவங்கள் தொடரும் .

5 கருத்துகள்:

  1. விரைவில் அணைத்து ப்ரோவ்செர் யையும் சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  2. have you read shirdi saibaba life history? if not read it now.

    பதிலளிநீக்கு
  3. enaku niraya anupavam undu .naan sai baba vai ninaitha udan en kannuku vanthu viduvaar.etho oru idathi avarathu thiru uruva photovai paathu viduvey. athu thaan avarin sakthi.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.