shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72
நாங்கள் ஒரு பிளாட்டில் வசிக்கிறோம் . மொத்தம் ஆறு வீடுகள் உள்ளன . ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடி. இரண்டாம் மாடியில் இருப்பவர்கள் சாய் பாபாவின் தீவிர பக்தர்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் உள்ள ஷிர்திக்கு செல்வது வழக்கம் .
சாய் பாபாவுடன் ஆனா என்னுடைய அனுபவத்திற்கு வருவோம்.
ஒரு நாள் எனக்கு ஒரு கனவு. நான் வாக்கிங் போவதற்காக மொட்டை மாடிக்கு போய் கொண்டிருக்கிறேன். (பொதுவாக நான் வாக்கிங் போவது எங்கள் மொட்டை மாடியில் தான் .நிலா வெளிச்த்தில் நடப்பது தனி சுகம் ). நான் மாடிக்கு போகும் போது யாரோ அங்கு படுத்திருந்தார்கள் (நான் கனவை பற்றி சொல்லிவருகிறேன்). அவர் ஒரு வயதானவர் போல் தோன்றினார்.
நான் அங்கு படுத்துதிருந்தவரை பார்த்து
"யார் நீங்கள் ? எங்கள் மொட்டை மாடியில் வந்து படுத்து இருக்குறீர்களே என்று கேட்டேன்.
அதற்கு அவர்
"நான் ஒரு வயோதிகன் , நான் மாடி படி ஏறி வந்ததால் கலைத்து போய்விட்டேன் என்றார்".
நான் கேட்டேன்
"நீங்கள் யார் ?,இங்கு ஏன் வந்தீர்கள் ?"
அதற்கு அவர் என்னை உனக்கு தெரியவில்லையா என்று கேட்டார் ?
நான் சற்று உற்று பார்தேன். அவர் பார்ப்பதற்கு சாய் பாபா போல் காட்சி அளித்தார் .
நான் "நீங்கள் சாய் பாபாவ" என்றேன்
அதற்கு அவர் ஆமாம் என்று தலை அசைத்தார் .
நான் "நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன்.
அவர் "நான் இரண்டாம் தளத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு வந்தேன் " என்றார்.
நான் " அப்படியானால் அவர்கள் வீட்டுக்கு போகாமல் மாடி வரை வரவேண்டிய கரணம் என்ன " என்று
அவர் ." நான் எப்போடியோ இங்கு வந்து விட்டேன் . எனக்கு ஒரு உதவி செய்வாயா " என்று கேட்டார்.
நான் "சொல்லுங்கள் என்னால் முடிந்தால் செய்கிறேன் என்று "
அவர் " அந்த இரண்டாம் மாடி வீட்டில் உள்ளவர்களிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா " என்று கேட்டார்.
உடனே என் கனவு கலைந்தது .
என்னால் ஒன்றும் நம்ப முடியவில்லை. நான் காலை எழுந்தவுடன் அவர்களிடம் எதை சொல்லலாமா சொல்லவேண்டாமா என்று பல முறை யோசித்தேன். இந்த அறிவியல் காலத்தில் இந்த கனவை எப்படி எடுத்து கொள்வார்களோ என்று நினைத்தேன்.
என்ன நினைத்தால் என்ன என்று எண்ணி அவர்கள் கதவை தட்டினேன் . அவர்களிடம் என் கனவை பற்றி கூறினேன். என் கனவை பற்றி சொல்லி முடிந்தவுடன் அவர்கள் அனைவரம் அழ தொடங்கி விட்டார்கள். நாங்கள் சாய் பாபாவை பல ஆண்டுகளாக வழிபடுகிறோம் ஆனால் இது வரை அவர் எங்கள் கனவுகளில் வந்தது இல்லை .நீ பாகியம் செய்தவன் என்று சொன்னார்கள்.
இன்று எங்கள் மொட்டை மாடியில் சாய் பாபாவிற்கு ஒரு கோவில் உள்ளது . மேல் வீட்டார்கள் செய்தது.
இதுவும் ஒரு இனிய அனுபவம் தான்.
அடுத்த சாய் பாபா அனுபவம் அடுத்த ப்ளோகில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.