shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72
என்னுடைய நண்பன் ஒரு தீவிர சாய் பாபா பக்தன் . அவனுடைய தொழில் நிறுவனத்தின் பெயர் மற்றும் அவனுடைய மகளின் பெயர் ஆகியவற்றில் சாய் பாபா பெயர் இடம் பெற்று இருக்கும் . அந்த அளவு சாய் பாபா பக்தி உள்ளவன்.அவனக்கு என்னுடைய சாய் பாபா அனுபவங்களை சொல்லியிருக்கிறேன்.
ஒரு நாள் அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான். " நான் ஷிர்டி செல்கிறேன் என்னுடன் வருகிறாயா ? " என்று கேட்டான் .
நான் வழக்கம் போல " நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" அதனால் நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன்.
அவன் போய் வரும் செலவு வரை அவனே பார்த்து கொள்கிறேன் என்று சொன்னான்.
நான் அவன் சொன்னதை எல்லாம் தட்டி கழிக்கவே அவன் சாபம் இட்டான்.
"நீ ஷிர்தி செல்வாய் ஆனால் நீ சாய் பாபாவை காண முடியாது " என்று சொல்லி நடையை கட்டினான்.
இந்த சம்பவம் நடந்து பல மதங்கள் ஓடின.
உங்களுக்கு எல்லாருக்கும் குஜராத் பூகம்ப சம்பம்வம் ஞயாபகம் இருக்கும் என நம்புகிறேன். நான் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒரு ஊறுப்பினர் ஆவேன். நாங்கள் ஒரு லாரியில் உணவு பொருட்கள் மற்றும் மருத்துகள் (கிட்டதட்ட 15 டன் உதவி பொருட்களுடன்) சென்றோம் .
நாங்கள் தரை வழி மார்கமாக குஜராத் சென்றோம். குஜராத் செல்ல 7 நாட்கள் தேவை . ஒரு நாள் நாங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை கடந்து இருக்கும் பொது எங்கள் லாரி சிக்னல் கிடைக்கவில்லை என்று சாலையில் காத்து கொண்டிருந்தது . அந்த இடத்தில எங்கு பார்த்தாலும் காவி கொடி பறந்து கொண்டிருந்தது. நான் எங்கள் லாரி டிரைவர் யை பார்த்து கேட்டேன் . நாம் இருக்கும் இடத்திற்கு என்ன பெயர் என்று . அவர் சொன்னார்
"நாம் இருக்கும் இடம் சாய் பாபா கோவில் அமைந்துள்ள ஷிர்டி என்றார்".
எனக்கு கோவிலின் கோபுரம் காண முடிந்தது .நான் டிரைவர் இடம் நான் போய் கோவிலை பார்த்துவிட்டு வரட்டுமா என்றேன். ?
அதற்கு அவர் சிக்னல் எப்போது வேண்டுமானாலும் கிடக்கலாம், அதனால் நாம் காத்திருக்க முடியாது என்றார். எனக்கு நல்ல நினைவிருக்கிறது நாங்கள் அந்த இடத்தில் அரை மணி நேரம் மேல் காத்திருந்தோம். இருந்தாலும் என்னால் கோவிலுக்கு செல்ல முடிய வில்லை.
இது என்னுடைய நண்பனின் சாபமாக இருக்குமோ ?ஒன்றும் புரிவயில்லை.
இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு அனுபவம்.
இந்த சம்பவத்தை என்னுடைய நண்பனுக்கு சொன்னேன்.அவன் மிகவும் வருந்தினான் .
yes realy sai baba is great, he is powerful god, im also fan of our sai baba,
பதிலளிநீக்குThanks Friengs for shared ur experiance......................